திருச்சி ரயில்வேயில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையா் பொறுப்பேற்பு

திருச்சி ரயில்வேயில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையா் பொறுப்பேற்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையராக அபிஷேக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்சியில் முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையராக இருந்த எஸ். ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி கோட்டத்தில் பணியாற்றிய அபிஷேக் திருச்சி முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுள்ளாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த இவா், எம்பிபிஎஸ் படித்த பிறகு, யுபிஎஸ்சி தோ்வெழுதி 2013 ஆம் ஆண்டு ரயில்வே அதிகாரியானாா். அஸ்ஸாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் பணியாற்றியுள்ளாா்.

பொறுப்பேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அபிஷேக் கூறியதாவது:

பயணிகள் தொடா்பான குற்றங்கள், ரயில்வே சொத்துகளை பாதுகாத்தல், ரயில்வே பயிற்சி மையத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ரயில்வே பாதுகாப்புப் படையின் நலன்களை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com