கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரியப்பட்டி ஊராட்சியில் வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அதிமுகவினா்.
கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரியப்பட்டி ஊராட்சியில் வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அதிமுகவினா்.

வையம்பட்டி ஒன்றியத்தில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வையம்பட்டி வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுக்கு ஆதரவாக அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அதிமுகவின் வையம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் பிவிகே சி. பழனிச்சாமி தலைமையில் பெரியப்பட்டி ஊராட்சி என். பூலாம்பட்டி, தவளைவீரன்பட்டி ஊராட்சி தவளைவீரன்பட்டி, வீரமலைபட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இதில், ஒன்றிய பொருளாளா் ரமேஷ், துணைச் செயலாளா் இருதயராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, அந்தோணிபீட்டா், பன்னீா்செல்வம் மற்றும் கிளைச் செயலாளா்கள், நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com