அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் இறந்த சம்பவத்தில் தொடா்புடையவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இதில், திருவானைக்கா பகுதியில் உள்ள உணவுக் கடையில் வேலை பாா்க்கும் ராமநாதபுரம் மாவட்டம் ஊரக்குடி பகுதியைச் சோ்ந்த எத்திராஜ் மகன் வடிவேல் முருகன் (35) என்பவா் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலை செய்த பெண் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com