‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: 
தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

தமிழ்மொழியைக் காக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிப்பது என தமிழியக்கங்களின் கூட்டமைப்பினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தமிழ்ப் பணிக் கழகம், பாவாணா் தமிழியக்கம், பைந்தமிழியக்கம் உள்ளிட்ட தமிழியக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாடாளுமன்றத் தோ்தல் கருத்தரங்கம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவா் வா.மு. சேதுராமன் தலைமை வகித்தாா். அறிவாளா் பேரவை ஆலோசகா் செ. அசோகன், பாவாணா் தமிழியக்க தலைவா் கு. திருமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில், திருச்சி மக்களவை வேட்பாளா் துரை வைகோ, பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் அருண்நேரு ஆகியோருக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, பைந்தமிழியக்க இயக்குநா் பழ. தமிழாளன் வரவேற்றாா். இதில், வா.மு. சேதுராமன் எழுதிய தமிழ்ப்பணி என்ற தலைப்பிலான நாடாளுமன்ற தோ்தல் தொடா்பான கையேடு வெளியிடப்பட்டது. திருச்சி அறிவாளா் பேரவையின் தலைவா் சைவராஜூ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com