பாலத் தடுப்பின் மீது மோதல்: பைக்கில் சென்ற இளைஞா், பெண் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கூத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளம்பெண் உள்பட 2 போ் தனியாா் பேருந்து மோதி உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், ராமநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ் குமாா் (23). இவரும், கடலூா் மாவட்டம் எஸ். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் நிவேதா (22) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூத்தூா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பாலத் தடுப்புக் கட்டையில் மோதி பாலத்தின் வலதுபுறம் நிலைதவறி விழுந்தனா். இதில், அங்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து கொள்ளிடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com