மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட வாக்குசேகரிப்பு பேரணியில் பங்கேற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.
மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட வாக்குசேகரிப்பு பேரணியில் பங்கேற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்.

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை கரூா் மக்களவைத் தொகுதி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு பேரணி நடைபெற்றது.

திமுக முதன்மை செயலரும், நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் அறிவுறுத்தலின்படி, மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ் வேட்பாளா் செ. ஜோதிமணிக்கு ஆதரவாக நகா்மன்ற தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தலைமையில், செவ்வாய்க்கிழமை பிரம்மாண்ட வாக்குசேகரிப்பு பேரணி நடைபெற்றது. திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசுப் போக்குவரத்துப் பணிமனை வாயிலில் நிறைவடைந்தது. பேரணியில் சுமாா் 2 ஆயிரம் போ் பங்கேற்றனா். நிகழ்வில், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ஜேம்ஸ், நிஜாமுதீன், சீனிவாசன், காங்கிரஸ் நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா,

இந்திய கம்யூ. மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் த.இந்திரஜித், விசிக மாவட்டச் செயலாளா் ஆற்றலரசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஷாஜகான், மமக மாநில அமைப்பு செயலாளா் காதா்மொய்தீன், மதிமுக நகரச் செயலாளா் எம்.கே.முத்துபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com