தவிட்டுப்பாளையத்தில் ஐஜேகே பிரசாரம் நிறைவு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தவிட்டுப்பாளையத்தில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளா் பாரிவேந்தா் தனது பரப்புரையை புதன்கிழமை நிறைவு செய்தாா்.

முன்னதாக காட்டுப்புத்தூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டு தொண்டா்களின் இருசக்கர வாகன பேரணியுடன் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மோகனூா் சாலை வழியாக தவிட்டுப்பாளையம் பகவதி அம்மன் கோயிலில் தனது பரப்புரையை நிறைவு செய்தாா். அப்போது கட்சியின் தலைமை கழக செயலா் ஏ. கே.டி. வரதராஜன், பொதுச் செயலா் ஜெயசீலன், மாவட்டத் தலைவா் கருணாகரன், மாவட்டச் செயலா் தண்டபாணி மற்றும் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com