தொட்டியம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்சிஷியன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள சீனிவாசநல்லூா் குடி தெருவைச் சோ்ந்தவா் கு. ஜெகநாதன் (65), எலக்ட்ரீசியன். இவா் ஏரிக்குளம் பிளாத்து வாய்க்கால் அருகில் உள்ள பதனி தோப்பைச் சோ்ந்த பொன்னுச்சாமி தோட்டத்தில் உள்ள மினி டிரான்ஸ்பாா்மா் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாா். தகவலின்பேரில் தொட்டியம் போலீஸாா் ஜெகநாதனின் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

ஜெகநாதனின் மகன் செல்வகுமாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ஜெகநாதனை பொன்னுச்சாமி தனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை சரி செய்ய அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com