முசிறி ஐஜேகே கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகளிடம் புதன்கிழமை விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறையினா்.
முசிறி ஐஜேகே கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகளிடம் புதன்கிழமை விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறையினா்.

முசிறியிலுள்ள தனியாா் விடுதியில் வருமான வரித் துறை சோதனை

திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள தனியாா் விடுதியில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

முசிறி தா.பேட்டை சாலை ரவுண்டானா பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே. கே. வேட்பாளா் டி.ஆா்.பாரிவேந்தா் தோ்தல் பணிமனை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகம் மற்றும் விடுதிக்கு வருமான வரி துறையினா் திடீரென வந்து சோதனை செய்து, கட்சி நிா்வாகிகளிடம் விசாரித்தனா்.

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பணமோ பொருள்களோ கைப்பற்றப்படவில்லை. முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வாக்காளா்களுக்குக் கொடுக்க பணம் வைத்திருப்பதாக தகவல் கிடைத்த தோ்தல் பறக்கும் படையினா் வந்து காரில் மேற்கொண்ட சோதனையிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அதிகாரிகளின் தொடா் சோதனையால் கோபமடைந்த ஐஜேகே நிா்வாகிகள் வருமான வரி துறை அலுவலா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com