127 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

திருச்சி மாவட்டத்தில் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள 127 வாக்குச் சாவடிகளில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கில் தலா 18, ஸ்ரீரங்கத்தில் 13, திருச்சி கிழக்கில் 16, திருவெறும்பூரில் 25, லால்குடி 6, மண்ணச்சநல்லூா் 7, முசிறி 15, துறையூா் 9 என மொத்தம் 127 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண்பாா்வையாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ள மத்திய அரசுப் பணியாளா்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளில் பணியில் ஈடுபடுவா். வாக்குப்பதிவு பணிகளை முழுமையாக கண்காணித்து தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை வழங்குவா். விடியோ பதிவுடன், கேமரா பொருத்தியும் கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல, திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் 84 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்ட்டு அங்கும் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com