கிணற்றில் தவறி விழுந்தவா் பலி

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் இறைத்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி உறையூா் காவேரி நகா் 6 ஆவது குறுக்குத் தெரு பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (57). இவா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீா் இறைத்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்தாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா், போலீஸாா் அவரை சடலமாக மீட்டனா். சம்பவம் குறித்து அவரது மனைவி ஆனந்த சுந்தரி அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com