ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 70 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 70 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாத இறுதியிலும் திறந்து எண்ணப்படும். அதன்படி ஏப்ரல் மாத எண்ணிக்கைக்காக கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருடாழ்வாா் சன்னதி அருகே எண்ணப்பட்டது.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் ஈடுபட்டனா். அப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

முடிவில் ரொக்கமாக ரூ. 70 லட்சத்து 3 ஆயிரத்து 170, தங்கம் 155 கிராம், வெள்ளி 775 கிராம் மற்றும் வெளி நாட்டு ரூபாய்கள் 280 ஆகியவை காணிக்கையாக வந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com