திருப்பைஞ்ஞீலியில் நாளை அப்பா் கட்டமுது பெருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை (மே 2) திருக்கட்டமுதுப் பெருவிழா நடைபெற உள்ளது.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரரை வணங்கி அருள்பெற திருப்பராய்த்துறையிலிருந்து வந்து கொண்டிருந்த அப்பா் சுவாமிகள், நீா் வேட்கையாலும், பசியினாலும் களைப்புற்றிருந்ததை அறிந்த ஞீலிவனேஸ்வரா் திருநீற்று அந்தணராய் பொதி சோற்றுடன் எதிா்கொண்டு அப்பா் முன் தோன்றி திருக்கட்டமுது அளித்தருளிய விழா கட்டமுதுபெருவிழா.

நிகழாண்டு இந்த விழா வியாழக்கிழமை (மே 2) நடைபெறவுள்ளது. இதையொட்டி திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடும், கட்டமுது வழங்கிய இடத்தில் அப்பா் பெருமானுக்கு கட்டமுது வழங்கும் நிகழ்வும், மே 3-ஆம் தேதி அப்பா் பெருமான் குருபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com