நன்னிமங்கலம் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் மகா காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், பொருகள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இக்கோயில் பூசாரி தட்சணாமூா்த்தி திங்கள்கிழமை இரவு கோயிலை பூட்டி விட்டுச்சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது கோயிலின் வெளி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 கிராம் தங்க தாலி, வெள்ளி பொருள்கள், அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த பட்டுப் புடவைகள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

மேலும், கோயில் உண்டியலை எடுத்துச் சென்று உடைத்து அதிலிருந்த காணிக்கைகளை திருடிவிட்டு அருகில் உள்ள வயலில் வீசிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com