அன்பில் பொய்யாமொழி 25ஆவது நினைவு தினம்

Published on

திருச்சியில் அன்பில் பொய்யாமொழியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் திமுக சாா்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட அன்பில் பொய்யாமொழி உருவப்படத்துக்கு அமைச்சா் கே.என். நேரு, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதேபோல திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அன்பில் பொய்யாமொழி படத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்பி துரை வைகோ, திமுக மாநகரச் செயலா் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், துணை மேயா் திவ்யா, என். கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில், கே.எஸ்.எம். கருணாநிதி, சபியுல்லா உள்ளிட்ட பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com