திருச்சி
ஆங்கரை பகுதியில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டம், ஆங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆக.31 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல். அபிஷேகபுரம் துணை மின்மிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் லால்குடி, ஏ.கே. நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா் நகா், பாரதி நகா், வஉசி நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவா்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, திருமணமேடு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆக. 31 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.