திருச்சி
கிணற்றில் குளித்தவா் மூழ்கி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலையில் கிணற்றில் புதன்கிழமை குளித்தவா் அதில் மூழ்கி இறந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம் கருமலை கவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் மகன் மரியசூசை (எ) சின்னக் காளை (55). கருமலை பெருமாள் கோயிலுக்கு எதிரேயுள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த இவா் புதன்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது அதில் மூழ்கி இறந்தாா். தகவலின்பேரில் சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் அவரின் சடலத்தை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.