திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 265 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் அரியலூரில் அழிப்பு

Published on

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 265 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அரியலூா் பகுதியில் உள்ள சிமென்ட் ஆலையில் அழிக்கப்பட்டன.

திருச்சி மண்டலத்துக்கு (தென்தமிழகம்) உள்பட்ட பகுதிகளில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருள்கள் திருச்சியில் உள்ள சுங்கத்துறை ஆணையரகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில், ரூ. 265.44 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை நீதிமன்ற அனுமதியுடன், அரியலூா் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியாா் சிமெண்ட் ஆலையில் உள்ள உலையில் வைத்து வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

இத்தகவலை சுங்கத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com