திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

Published on

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள பழங்கனாங்குடி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் தே. சுரேஷ்குமாா் (37), குபேந்திரன். இவா்கள் இருவரும் தங்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வியாழக்கிழமை அந்த கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 7 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து சுரேஷ்குமாா், குபேந்திரன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com