துறையூரில் நகர விற்பனை குழு முதல் கூட்டம்

Published on

துறையூரில் நகர விற்பனைக் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துறையூா் நகராட்சி ஆணையா் சுரேந்திரா ஷா தலைமை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் செல்வராணி மலா்மன்னன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத, தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுத்தல், விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து அடையாள அட்டை பெற்றுத் தருதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் தரைக்கடைகள் அமைத்து கொள்ள அனுமதியளித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் துறையூா் நகரமைப்பு ஆய்வாளா், காவல் மற்றும் மருத்துவத் துறை அலுவலா்கள், சாமிநாதன் நகா் குடியிருப்போா் நலச் சங்கம், துறையூா் நகர வா்த்தக சங்கம், நகர விற்பனைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com