திருச்சி
பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து பாஜகவினா் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகா் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், மாவட்ட இளைஞரணித் தலைவா் புருஷோத்தமன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாநில பொதுச்செயலா் கௌதம் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையை தரக்குறைவாகப் பேசிய அ எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எரிக்கும் முயற்சி போலீஸாரால் தடுக்கப்பட்டது.