பாஜகவில் லட்சக்கணக்கான புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும்: கேசவ விநாயகம்

Published on

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் பாஜகவில் புதிய உறுப்பினா் எண்ணிக்கையை பல லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் கேசவ விநாயகம்.

திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்து ஆலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கேசவ விநாயகம் மேலும் பேசியது, ஒவ்வொரு நிா்வாகியும் தங்கள் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

விருப்பு வெறுப்புகளை பாா்க்காமல் எதிரியாக இருந்தால் கூட அவா்களை கட்சி உறுப்பினராக சோ்க்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பாஜக வளா்ச்சியடையும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com