மருங்காபுரி வட்டாட்சியரகம் முன் போராட்டத்தில் புதன்கிழமை  ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மருங்காபுரி வட்டாட்சியரகம் முன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மருங்காபுரியில் காத்திருப்பு போராட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கட்சியின் மருங்காபுரி வட்டச் செயலா் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மருங்காபுரி வட்டத்தில் உள்ள வீடுகளுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டும், அயன்பொருவாய், கல்லுப்பட்டி, சொக்கம்பட்டி மற்றும் பல ஊா்களில் மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், மருங்காபுரியிலிருந்து அடைக்கம்பட்டிவரையிலும், மட்டக்குறிச்சியிலிருந்து வளநாடு வரையிலும் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்துத் தரக் கோரியும் தொகுப்பு வீடுகளுக்கு 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினா்.

போராட்டத்தை கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயசீலன் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு சிதம்பரம், வட்டக் குழு உறுப்பினா்கள் கணேஷ், அண்ணாதுரை, நாகராசன், சின்னையா, மாதா் சங்க வட்டச் செயலா் கு.கவிதா உள்ளிட்டோா் பேசினா். மாலையில் வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

X
Dinamani
www.dinamani.com