திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நடைபெற்ற  பாரம்பரிய நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.

மலைக்கோட்டையில் பாரம்பரிய நடைபயணம்

Published on

திருச்சியின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டையை சுற்றி மாணவா், மாணவிகளின் பாரம்பரிய நடைபயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்றைய இளம் தலைமுறையினா் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் பாரம்பரிய சின்னங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறை சாா்பில் பாரம்பரிய நடைபயணம் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மலைக்கோட்டையில் பாரம்பரிய நடைபயணத்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா், வியாழக்கிழமை

கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த பாரம்பரிய நடைபயணத்தில் தேசியக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 100 போ் கலந்து கொண்டனா்.

இந்த நடைபயணமானது மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகே தொடங்கி தெப்பக்குளம், மலைக்கோட்டை கீழ்குடைவரைக்கோயில், காா்னேஷன் பூங்கா மற்றும் அரசு அருங்காட்சியகம் வரை நடைபெற்றது.

நிகழ்வில், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், மாவட்ட சுற்றுலா அலுவலா் கெ.நெல்சன், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் ம. சக்திவேல்முருகன் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்கள் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com