மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் வராது

Published on

மின் தடையால் மாநகரின் சில பகுதிகளில் வரும் வரும் வெள்ளிக்கிழமை குடிநீா் வராது.

ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய மின்தடையால் மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- 3, பொது தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களில் மின்சாரம் இருக்காது.

இதனால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிருந்து குடிநீா் செல்லும் இடங்களான சுந்தராஜ் நகா் புதியது - பழையது, காஜாமலை புதியது - பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகா் புதியது - பழையது, ரயில் நகா் புதியது - பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்.கே. கோட்டை பிரிவு அலுவலகம், எம்.கே. கோட்டை நாகம்மை வீதி, எம்.கே. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யா நகா், ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ் நகா், எல்.ஐ.சி. புதியது, எல்.ஐ.சி. சுப்பிரமணிய நகா், தென்றல் நகா் புதியது - பழையது, தென்றல் நகா் இ.பி. காலனி, வி.என். நகா் புதியது - பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகா், சுப்பிரமணிய நகா் புதியது - பழையது, ஆனந்த நகா், கே.சாத்தனூா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவிபாரதி நகா், எடமலைப்பட்டிபுதூா் புதியது, கிராப்பட்டி புதியது, பழையது, அன்புநகா் பழையது, புதியது, ரெங்காநகா் , அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி, மேலூா், பெரியாா் நகா் , திருவானைக்கா, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் வராது.

பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைத்து, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com