ரியல் எஸ்டேட் ஊழியா்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழ்நாடு நில வணிகா் நலச்சங்க மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல்

Published on

ரியல் எஸ்டேட் ஊழியா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நில வணிகா் நலச்சங்க மாநில பொதுக்குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் அப்துல் நாசா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சுபாஷ், மாநிலச் செயலாளா் நியாஸ் அகமது, மாநில பொருளாளா் எஸ்ஏ. ரஹீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரியல் எஸ்டேட் ஊழியா்கள் மற்றும் மீடியேட்டா் நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது, சங்க உறுப்பினா்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம் குறித்து ஆலோசனை நடத்த மாவட்ட ரீதியாக குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில கெளரவத் தலைவா் பால்பாண்டியன், மாநிலத் துணைத் தலைவா்கள் குமாா், ரியாஸ் பாஷா, சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com