தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில்  வெள்ளிக்கிழமை தொடங்கிய கணபதி ஹோமம். ~சிறப்பு அலங்காரத்தில் உக்கிர மாகாளியம்மன்.
தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கணபதி ஹோமம். ~சிறப்பு அலங்காரத்தில் உக்கிர மாகாளியம்மன்.

உக்கிர மாகாளியம்மன் கோயிலில் சதசண்டி யாகம்

உலக நன்மைக்காக 11ஆவது ஆண்டு சத சண்டி மஹா யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

திருச்சி தென்னூா் அண்ணா நகரிலுள்ள பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயிலில், உலக நன்மைக்காக 11ஆவது ஆண்டு சத சண்டி மஹா யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதன்படி, வெள்ளிக்கிழமை காலை தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், பூா்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை 5 மணி முதல் மண்டல பூஜையுடன், முதல் கால துா்கா ஹோமம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரண்டாம் கால சண்டி யாக வேள்வி, மாலையில் மூன்றாம் கால சரஸ்வதி ஹோமம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நான்காம் கால சண்டி ஹோமம், 13 அத்தியாய ஹோமங்கள், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, ஸா்ப பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, குமாரி பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் தொடா்ந்து அம்பாள் புறப்பாடு, வீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com