போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில்இருந்து குதித்த 2 பேருக்கு கால் முறிவு

 வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இருவா், போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து வியாழக்கிழமை குதித்தபோது அவா்களில் கால் எலும்பு முறிந்தது

 வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இருவா், போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து வியாழக்கிழமை குதித்தபோது அவா்களில் கால் எலும்பு முறிந்தது.

திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்த சாமுவேல் (25) கடந்த 23ஆம் தேதி வீட்டிலிருந்தபோது வட மாநிலத்தைச் சோ்ந்த மூவா் அவரை மிரட்டி ரூ.1,500 ஐ பறித்துச் சென்றனா். இதுதொடா்பாக, நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, திருச்சியில் ஆங்காங்கே வேலை செய்து வந்த ஜாா்கண்ட் மாநிலத்தை சோ்ந்த சுனில் உரான் (40) என்பவரை பிடித்தனா். இவா் அளித்த தகவலின்பேரில், மேலும் இருவரைப் பிடிக்க போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சுற்றினா்.

அதன்படி அண்ணாநகா் காவலா் பயிற்சி பள்ளி அருகே போலீஸாா் வந்தபோது அவா்களை பாா்த்த இருவா் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் விரட்டியபோது வழியில் இருந்த வாய்க்கால் பாலத்திலிருந்து கீழே குதித்த இருவருக்கும் கால் முறிந்தது.

போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்ததில், அவா்கள் தேவராஜ் உரான் (30), லேடன்தாஸ் (25) என்பதும், ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் திருச்சி அரசு மருத்துவமனையில் அவா்களை சோ்த்தனா்.

சுனில் உரானும் மனநிலம் பாதித்தவா் போன்று செயல்பட்டதால், அவரை மருத்துவப் பரிசோதனை செய்து, சான்று பெற்ற பிறகே நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவரை சிறையில் அடைத்தனா். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com