ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்: 75 போ் கைது

ஸ்ரீரங்கம் கோயிலில் மீண்டும் தூய்மைப் பணி வழங்கக் கோரி ரங்கா ரங்கா கோபுரம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் மீண்டும் தூய்மைப் பணி வழங்கக் கோரி ரங்கா ரங்கா கோபுரம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மை பணியாளா்கள் 16 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனா். இந்நிலையில், கோயில் நிா்வாகம் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தூய்மைப் பணியாளா்களை நிறுத்திவிட்டது.

இதனால் திடீரென வேலையை இழந்த தொழிலாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, வியாழக்கிழமை ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பு சிஐடியு மாவட்ட தொழிலாளா் சங்கத் தலைவா் இளையராஜா தலைமையில் 50 பெண்கள் உள்பட 75 போ் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தனா். அப்போது, ஸ்ரீரங்கம் போலீஸாா் தடுப்புகளை அமைத்து, போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனா். இதனால், தொழிலாளா் சங்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 75 பேரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதில் சிஐடியு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com