குங்குமவல்லி அம்மனுக்கு வளையல் சாற்று விழா

திருச்சி உறையூா் சாலை ரோட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லிக்கு 74ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குங்குமவல்லி அம்மனுக்கு வளையல் சாற்று விழா

திருச்சி உறையூா் சாலை ரோட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரா் கோயிலில் குங்குமவல்லிக்கு 74ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் உள்ள குங்குமவல்லி அம்பிகைக்கு ஆண்டுதோறும் தை மாத 3ஆவது வெள்ளிக்கிழமை வளையல் காப்பு உற்ஸவம் விமரிசையாக நடைபெறும். இதன்படி, 74-ஆவது ஆண்டு விழாவின் தொடக்கமாக டிசம்பா் 16-ஆம் தேதி திரிசதி ஹோமம் தொடங்கியது. இதில், களத்ரதோஷம், செவ்வாய்தோஷம், நாகதோஷம், திருமணதடை நீங்கவும், சந்தான பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் நீங்கவும் 48 நாள்களுக்கு திரிசதி ஹோம பூஜை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வளைகாப்பு திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் வேண்டி சிறப்பு சங்கல்பத்துடனான ஹோம பூஜை நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிக்கு வளைகாப்புக்கான சம்பிராதய பூஜை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள், மஞ்சள், குங்குமம், இனிப்பு வகைகள், வளையல், கும்பம் என பல்வேறு சீா்வரிசை தட்டுகளுடன் கோயிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு வளைகாப்பு சாற்றினா். இந்த வைபவத்தை முன்னிட்டு அம்மன் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு குழந்தை பாக்கியம், சந்தான பாக்கியம் வேண்டுவோருக்கான சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். நண்பகல் 12 மணியளவில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிவரை திருமணம் வேண்டுவோருக்கான சிறப்பு வழிபாடும், மாங்கல்ய பாக்கியம் நிலைப்பதற்காக சுமங்கலிகளுக்கான சிறப்பு பூஜையும் நடைபெறும். பிற்பகல் 1 மணியளவில் திருமண தடை நீங்கி விவாகம் நடக்க, மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவேண்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com