நெல்லில் சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெற பயிற்சி

நெல்லில் சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெற நெல் ப்ளூம் எனும் தெளிப்பு பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெல்லில் சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெற நெல் ப்ளூம் எனும் தெளிப்பு பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் லால்குடி அருகே உள்ள திண்ணியம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியை திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனா் சக்திவேல் தொடக்கி வைத்தாா்.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ப.முரளி அா்த்தனாரி, லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுகுமாா், வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) சாந்தி, வேளாண் உதவி இயக்குநா்( தரக்கட்டுப்பாடு) மாரியப்பன், வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியா் சகிலா, லால்குடி வேளாண் அலுவலா் வடிவேல், திண்ணியம் ஊராட்சி மன்ற உறுப்பினா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிா் வினையியல் துறை இணைப் பேராசிரியா் முனைவா் பாபு ராஜேந்திர பிரசாத், பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள பயிா் பூஸ்டா்கள் குறித்தும், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் முனைவா் சி.ராஜா பாபு ஒருங்கிணைத்து சம்பா பருவ நெல்லில் நெல் ப்ளும் தெளிப்பின் மூலம் மகசூல் அதிகரிப்பது குறித்து பேசினா் .

இப்பயிற்சியில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com