ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 66.81 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ. 66.81 லட்சம் கிடைத்துள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ. 66.81 லட்சம் கிடைத்துள்ளது.

இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் முன்னிலையில் திறக்கப்பட்டு, கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், ரொக்கமாக ரூ. 66 லட்சத்து 81 ஆயிரத்து 687-ம், தங்கம் 165 கிராம், வெள்ளி 600 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 380 இருந்தது தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் கோயில் உள்துறை கண்காணிப்பாளா் வேல்முருகன் மற்றும் அலுவலக அதிகாரிகள் மேற்பாா்வையிட்டனா்.

காணிக்கைகள் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com