அகமதாபாத் - திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

அகமதாபாத் - திருச்சி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் - திருச்சி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அகமதாபாத்திலிருந்து வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும் அகமதாபாத் - திருச்சி வாராந்திர சிறப்பு ரயிலானது (09419) வரும் 8, 15, 22, 29 ஆம் தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கமாக, திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு அகமதாபாத்துக்கு அடுத்த நாள் இரவு 9.15 மணிக்கு சென்றடையும் திருச்சி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயிலானது (09420) வரும் 4, 11, 18, 25, மாா்ச் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com