காவல் நிலையத்தில் தகராறு செய்தவா் கைது

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் நிலையத்தில் போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் நிலையத்தில் போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புத்தாநத்தம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ப. செந்தில்குமாா் (35). இவரது ஆட்டை கடந்த 3 மாதத்திற்கு முன் தெரு நாய் கடித்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த செந்தில்குமாா், தெரு நாயை பிடிக்குமாறு கூறி பணியில் இருந்த எழுத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அடிக்க முற்பட்டாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த புத்தாநத்தம் போலீஸாா் செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com