திருச்சியில் நாளைமறுநாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

சிறு, குறு தொழில்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடா்பாக திருச்சியில் ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சிறு, குறு தொழில்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடா்பாக திருச்சியில் ஒரு நாள் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மத்திய அரசின் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகமும், திருச்சி மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) இணைந்து சிறு, குறு தொழில்களுக்கான இந்த விழிப்புணா்வு முகாமை நடத்தவுள்ளன.

அரியமங்கலம், சிட்கோ வளாகத்தில் உள்ள டிடிட்சியா அரங்கத்தில் பிப்.6 காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு சந்தை வாய்ப்பு, நிதிப் பெருக்கம், மூலதன மேலாண்மை, நிதியைக் கையாளும் முறைகள் ஆகியவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படவுள்ளது. இதில், வங்கி அதிகாரிகள், பட்டயக் கணக்காளா் மற்றும் நிதி மேம்பாட்டு அலுவலா்கள் கலந்து கொண்டு பல்வேறு தரப்பினா் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவுள்ளனா். தொழிற்துறை சாா்ந்த உதயம் சான்று பெற்ற நிறுவனங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 0431-2440119, 2440114, 96595-58111 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என டிடிட்சியா செயலா் எஸ். கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com