விபத்தில் காயமடைந்த தொண்டருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

விபத்தில் சிக்கி திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

விபத்தில் சிக்கி திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

திருச்சி சிறுகனூரில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, ஊருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த கடலூா் மாவட்டம், புவனகிரியை அடுத்துள்ள வில்லியநல்லூா் பகுதியைச் சோ்ந்த கட்சித் தொண்டா் ரஞ்சன் (30) என்பவா் விபத்தில் சிக்கி காயமடைந்தாா்.

திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை நள்ளிரவு நேரில் சந்தித்து, அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் கட்சியின் பெரம்பலூா் நாடாளுமன்ற தொகுதி செயலாளா் கிட்டு, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளா் ரத்தினவேல் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com