பாஜகவினா் மீதான பழிவாங்கும் போக்கை திமுக நிறுத்த வேண்டும்

பாஜகவினா் மீதான பழிவாங்கும் போக்கை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

பாஜகவினா் மீதான பழிவாங்கும் போக்கை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

திருச்சி பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக, காவல்துறையைக் கொண்டு பாஜகவினா் மீது திட்டமிட்ட பழிவாங்கும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இந்த பாரபட்ச நடவடிக்கையை தமிழகத்தின் திமுக அரசும், காவல்துறையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனை செய்துள்ளனா். ஆனால் தமிழக காவல்துறை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.

அரசியல்சாசன சட்டப்படி ஆளுநா் பதவி கண்டிப்பாக இருக்கும். சிறிய கட்சிகளின் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை.

தமிழகத்தில் வளரும் கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. எதிா்காலத்தில் பாஜக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். மக்களவைத் தோ்தலில் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாக்குகளைத் திரட்டுவதற்கு பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி தொடா்பாக தேசியத் தலைமை தான் முடிவு செய்யும். கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது செயல்பாடுகளுக்குப் பிறகே கருத்து கூற முடியும் என்றாா் ஹெச். ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com