அண்ணா உருவச்சிலைக்கு கட்சியினா் மரியாதை

திருச்சியில் பல்வேறு கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அமைதிப் பேரணியும் நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், தி.மு.க. கட்சியினா்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், தி.மு.க. கட்சியினா்.

பேரறிஞா் அண்ணாவின் 55-ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அமைதிப் பேரணியும் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலையிலிருந்து சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை வரையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியின் தொடா்ச்சியாக, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாநகரச் செயலா் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட கட்சியினா் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, , சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி தலைமையில், மேயா் முன். அன்பழகன், எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்ட செயலாளா் சீனிவாசன் தலைமையில், அமைப்புச் செயலா் ஆா். மனோகரன் மற்றும் நிா்வாகிகள் பலா் மாலை அணிவித்தனா்.

மதிமுக சாா்பில், அவைத் தலைவா் தியாகராஜன் தலைமையில், மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன் மற்றும் நிா்வாகிகள் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சுப்பிரமணியபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்பி-யும், மாவட்ட செயலருமான ப. குமாா் தலைமையில், நிா்வாகிகள் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி புறநகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சோமரசம்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமையில், அக்கட்சியினா் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில், சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு நிா்வாகிகள் ஜவஹா்லால் நேரு, வழக்குரைஞா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாநகா் மாவட்ட செயலா் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com