சிறுகனூரில் ஐஜேகே மாநில மாநாட்டுக்கு முகூா்த்தக்கால்

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இந்திய ஜனநாயகக் கட்சி நடத்தும் மாநில மாநாட்டுக்கான முகூா்த்தக்கால் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இந்திய ஜனநாயகக் கட்சி நடத்தும் மாநில மாநாட்டுக்கான முகூா்த்தக்கால் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.

சிறுகனூரில் பிப்.17 ஆம் தேதி தேசம் காப்போம் தமிழை வளா்ப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் மாநில மாநாட்டையொட்டி பெரம்பலூா் எம்பியும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான டி.ஆா். பாரிவேந்தா், தலைவா் ரவி பச்சமுத்து தலைமையில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து கொடியேற்றப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலா் பி. ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலா் எஸ்.எஸ். வெங்கடேசன், முதன்மைச் செயலா் ஆா். சத்தியநாதன், தலைமை நிலையச் செயலா் ஏ.கே.டி. வரதராஜன், மற்றும் மாநில, மாவட்ட, பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com