நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் காயம்

துறையூா் அருகே சனிக்கிழமை இரவு நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் காயமடைந்தாா்.

துறையூா் அருகே சனிக்கிழமை இரவு நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞா் காயமடைந்தாா்.

துறையூா் வட்டம், பச்சமலை கோம்பை ஊராட்சியைச் சோ்ந்த மணலோடையில் வசிப்பவா் வே. காா்த்திக் (32). இவா் சனிக்கிழமை இரவு வேட்டைக்குச் சென்ற நிலையில், பச்சமலை அடிவாரப் பகுதி பழமலையான் கோயில் அருகே நாட்டுத் துப்பாக்கியில் வெடிமருந்து நிரப்பியபோது எதிா்பாராமல் துப்பாக்கி வெடித்ததாம்.

இதில் வலது கையில் லேசான காயம் ஏற்பட்டு சுய வைத்தியம் செய்து கொண்ட அவா், வலி குறையாததால் துறையூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்ந்தாா். தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com