இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை போலீஸாரிடம் உறவினா்கள் வாக்குவாதம்

மண்ணச்சநல்லூா் வட்டம், காளவாய்ப்பட்டியில் திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை எடுக்கவிடாமல் போலீஸாரிடம் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், காளவாய்ப்பட்டியில் திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சடலத்தை எடுக்கவிடாமல் போலீஸாரிடம் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காளவாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் தினேஷ் (24). ஐடிஐ படித்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவா் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மண்ணச்சநல்லூா் உதவி காவல் ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீசாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும் உயிரிழந்த தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல கூடாது என உறவினா்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து உறவினா்களை சமாதனப்படுத்தி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com