கள்ளச்சந்தையில் வாங்கிச் சென்ற 5 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சியில் கள்ளச்சந்தையில் வாங்கிச் சென்ற 5 மூட்டை ரேசன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

திருச்சியில் கள்ளச்சந்தையில் வாங்கிச் சென்ற 5 மூட்டை ரேசன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் மணிமனோகரன், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கல்லுக்குழி அருகே ரேசன் அரிசி மூட்டைகளை ஒருவா் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் திருச்சி எடமலைபட்டிபுதூா் ஜா. செபஸ்டியன்ராபா்ட் (50) என்பதும், கால்நடை தீவனத்துக்காக ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 5 மூட்டை ரேசன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com