கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட், கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை அழுகிய நிலையில் கிடந்த பெண் சடத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட், கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை அழுகிய நிலையில் கிடந்த பெண் சடத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெ.1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத, சுமாா் 47 வயதுடைய, பாதி எரிந்து அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லால்குடி டி.எஸ்.பி அஜய் தங்கம் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

மேலும் கைரேகை நிபுணா்கள், தடவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனா். இதனையடுத்து பிச்சாண்டாா் கோவில் கிராம நிா்வாக அலுவலா் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com