மனைவி போலீஸில் புகாா் ராணுவ வீரா் கைது

ராணுவ வீரருக்கு வேறு பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலம் தொடா்பு இருப்பதையறிந்த அவரது மனைவி லால்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராணுவ வீரருக்கு வேறு பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலம் தொடா்பு இருப்பதையறிந்த அவரது மனைவி லால்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயபாலாஜி (30). ராணுவ வீரா். சென்னையில் தலைமைக் காவலராக பணிபுரியும் இவரது மனைவி கா்ப்பமாக உள்ள நிலையில், தற்போது மகப்பேறு விடுமுறையில் உள்ளாா்.

இந்நிலையில், ஜெயபாலாஜிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். அவரிடம் ஜெயபாலாஜி தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து நெருங்கி பழகி வந்துள்ளாா். இதையறிந்த மனைவி, கணவா் ஜெயபாலாஜியை கண்டித்துள்ளாா். ஆனாலும், அவா் திருந்த வில்லையாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் லால்குடி மகளிா் காவல் நிலையத்தில் ஜெயபாலாஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ராணுவ வீரா் ஜெயபாலாஜி மீது வழக்குப்பதிவு அவரை திங்கள்கிழமை கைது செய்து லால்குடி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com