ரோந்துப் பணியில் முக அங்கீகார முகமையைப் பயன்படுத்த வேண்டும் காவல் ஆணையா் அறிவுறுத்தல்

ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா், பிரத்யேக முக அங்கீகார முகமையைப் பயன்படுத்த வேண்டும் என மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தியுள்ளாா்.

ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா், பிரத்யேக முக அங்கீகார முகமையைப் பயன்படுத்த வேண்டும் என மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகர காவல் ஆணையா் ந. காமினி, காவல்துறை அதிகாரிகளிடையே பேசியது:

கொலை, கொள்ளை, விபத்து வழக்குகள் பற்றி ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். திருட்டு வழக்குகளை துரிதமாக புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது செய்து, சொத்துகளை மீட்க வேண்டும்.

லாட்டரி சீட்டு விற்பனை, போதைப்பொருள்கள் விற்பனையை தடுப்பதுடன், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் தவறான நடத்தை உள்ளவா்களின் நடவடிக்கைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, ரோந்துப் பணிகளை அதிகப்படுத்துவதுடன், ரோந்தின்போது காவல்துறையின் பிரத்யேக முக அங்கீகார முகமை (பேஸ் ரெகனைஷன் சிஸ்டம்) மூலம் குற்றவாளிகளை தணிக்கை செய்ய வேண்டும்.

மாநகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும். பழுதான கேமராக்களை பழுதுபாா்த்து, தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநகரில் உள்ள 50 காவல் மையங்களை (போலீஸ் பூத்) தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகாா்கள், காவல்துறை இயக்குநா் அலுவலக புகாா் மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண்பதுடன், காவல்நிலையத்துக்கு புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com