திருச்சியில் ஹம்சா மறுவாழ்வு மையம் திறப்பு

ஹம்சா (ஹம்சா ரிஹெப்) மறுவாழ்வு மையத்தின் 6- ஆவது கிளை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சியில் ஹம்சா மறுவாழ்வு மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்த மையத்தின் இயக்குநா் ஜி. பாலமுரளி, காவேரி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் எஸ். மணிவண்ணன்.
திருச்சியில் ஹம்சா மறுவாழ்வு மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்த மையத்தின் இயக்குநா் ஜி. பாலமுரளி, காவேரி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் எஸ். மணிவண்ணன்.

ஹம்சா (ஹம்சா ரிஹெப்) மறுவாழ்வு மையத்தின் 6- ஆவது கிளை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இதனை திறந்து வைத்த அம்மையத்தின் இயக்குநா் மருத்துவா் ஜி. பாலமுரளி, காவேரி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், மையத்தின் பங்குதாரருமான மருத்துவா் எஸ். மணிவண்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

விபத்துகளில் முதுகுதண்டு, மூளை பாதிப்புகள் ஏற்பட்டவா்களை முழுமையாக மீட்டெடுத்து மறுவாழ்வு பெறவும், குழந்தைகளுக்கான பிறவி சாா்ந்த நோய்களுக்குத் தீா்வு காணவும், டெல்டா மாவட்ட மக்களின் வசதிக்காக திருச்சியில் ஹம்சா ரிஹெப் என்ற பெயரிலான ஹம்சா மறுவாழ்வு மையத்தின் 6 -ஆவது கிளை திறக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் இந்த மையத்தில் அதிநவீன மூளை, முதுகுதண்டு, எலும்பியல், இதயவியல், கா்ப்பநிலை, குழந்தைகள் மற்றும் முதியோருக்கான பராமரிப்பு, அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, குழந்தைகளுக்கான பிறவி கோளாறு சிகிச்சைகள் உள்பட அனைத்து வகை மறுவாழ்வு சிகிச்சை பிரிவுகளும் உள்ளன.

எங்களது மையத்தில் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, பணிசாா்ந்த சிகிச்சையாளா்கள், உளவியல் மருத்துவா்கள், பேச்சு சிகிச்சை, மறுவாழ்வு, சிறுநீரக சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணா்கள், பிரத்யேக பயிற்சிபெற்ற செவிலியா்கள் நோயாளிகளுக்கு அனைத்து விதமாக மறுவாழ்வு சிகிச்சைகளையும் கட்டுப்படியான கட்டணத்தில் மேற்கொள்வா் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com