ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை விவகாரம்: போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளா்கள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், திருச்சி அரசு போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் டி.வி. செல்வராஜ் தலைமை வகித்தாா்.

இதில், போக்குவரத்துத் தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 100 மாதம் நிலுவையுடன் வழங்க வேண்டும், பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு 18 மாத கால அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், அவுட்சோா்சிங் ஒப்பந்த முறையை திணிக்கக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சம்மேளனப் பொருளாளா் க. நேருதுறை, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், மாவட்டத் தலைவா் வே. நடராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com