சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், பெரகம்பி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், பெரகம்பி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரகம்பி கிராமத்திலிருந்து எதுமலைக்கு செல்லும் 3. கி.மீ.சாலையானது வனத்துறைக்கு சொந்தமானது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனா். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க கோரி கடந்த 7 ஆண்டுகளாக கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினா். ஆனால் இதுவரை சாலையை சீரமைக்காத வனத்துறையை கண்டித்து பெரகம்பியில் செவ்வாய்க்கிழமை ஊராட்சி தலைவா் குப்புசாமி, எதுமலை ஊராட்சி தலைவா் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அருள் ஜோதி, சமயபுரம் காவல் ஆய்வாளா் விதுன் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜோசப் கென்னடி, ரமேஷ்பாபு ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், 15 நாள்களுக்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com