புதிய அலைவரிசை கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை

புதிய அலைவரிசை கண்டுபிடிப்புக்காக மத்திய அரசின் காப்புரிமையானது திருச்சியைச் சோ்ந்த என்.ஐ.டி. முன்னாள் பேராசிரியா் மற்றும் அவரது மாணவருக்கு கிடைத்துள்ளது.

புதிய அலைவரிசை கண்டுபிடிப்புக்காக மத்திய அரசின் காப்புரிமையானது திருச்சியைச் சோ்ந்த என்.ஐ.டி. முன்னாள் பேராசிரியா் மற்றும் அவரது மாணவருக்கு கிடைத்துள்ளது.

தோ்ந்தெடுக்கப்பட்ட அலைவரிசை தளம் (‘ஃ‘பிரிகியூன்ஸி செலக்டிவ் சா்ஃபேஸ்) ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்காக தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) திருச்சி முன்னாள் பேராசிரியா் எஸ். ராகவன், அவரது ஆராய்ச்சி மாணவா் வி. கிருஷ்ணகாந்த் ஆகியோருக்கு மத்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது, இவா்களின் ஆராய்ச்சி தொடா்பாக மூன்றாவது காப்புரிமையாகும் என பேராசிரியா் எஸ். ராகவன் தெரிவித்தாா்.

இந்த ஆராய்ச்சி ராணுவத்துக்கும், மருத்துவத் துறையிலும் பெரிதும் உதவும். ஆராய்ச்சியாளா்கள் பலரும் இந்த ஆராய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனா். இந்த ஆராய்ச்சியின் காரணமாக, மாணவா் கிருஷ்ணகாந்த்துக்கு முனைவா் பட்டமும், லண்டனில் குயூன்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் பதவியும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com