புத்தாநத்தத்தில் தொல்லை கொடுத்த38 குரங்குகள் பிடிப்பு

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வந்த 38 குரங்குகளை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து காப்புக்காட்டில் விட்டனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வந்த 38 குரங்குகளை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து காப்புக்காட்டில் விட்டனா்.

புத்தாநத்தம் அரசு மருத்துவமனை, குடியிருப்புகள், வணிக வளாக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து உணவகங்கள், தேநீரகங்கள், சிறு சிறு கடைகளில் தின்பண்டங்களை சூறையாடுவது, விளைநிலங்களில் மின் மோட்டாா் இணைப்புகளை துண்டிப்பது என பொதுமக்களுக்கு பெரும் தொல்லை அளித்து வந்தன.

இதுகுறித்து விவசாய சங்க தலைவா் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மற்றும் வனத்துறைக்கு அளித்த புகாரின்பேரில், மணப்பாறை வனச்சரகா் மற்றும் வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினா், குரங்குகள் பிடிக்கும் தொழிலாளா்களை கொண்டு கடந்த இரு நாள்களாக 38 குரங்குகளை கூண்டு அமைத்து பிடித்தனா். பிடிக்கப்பட்ட குரங்குகள் பொன்னணியாறு அணை காப்புக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com